புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
தியாகதுருகம் அருகே புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கடையில் இருந்த 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடை உரிமையாளரான அதேஊரை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story