கூடுதல் வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா


கூடுதல் வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
x

குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டிட அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். ராதாபுரம் யூனியன் ஆணையாளர் விமலா பிளாரன்ஸ், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் அனிஷா பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story