மோகனூர் பகுதியில் மழை பொய்த்ததால் கருகும் நிலக்கடலை செடிகள் விவசாயிகள் கவலை


மோகனூர் பகுதியில்  மழை பொய்த்ததால் கருகும் நிலக்கடலை செடிகள்  விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:46 PM GMT)

மோகனூர் பகுதியில் மழை பொய்த்ததால் கருகும் நிலக்கடலை செடிகள் விவசாயிகள் கவலை

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் பகுதியில் மழை பொய்த்து போனதால் நிலக்கடலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் மானாவாரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மானாவாரி பயிறு சாகுபடி செய்து வருகின்றனர். எஸ்.வாழவந்தி, காளிபாளையம், கே.புதுப்பாளையம், பெரமாண்டம்பாளையம், ஆரியூர், தோளுர், அணியாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மோகனூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் நிலக்கடலை செடிகள் தற்போது காய்ந்து கருகும் நிலையில் உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் நிலக்கடலை செடிகள் முற்றிலும் காய்ந்து போகும் அபாய நிலை உள்ளது.

விவசாயிகள் கவலை

எனவே மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மோகனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் ஆடி பட்டம் மானாவாரி கடலை விதைத்தால் ஐப்பசி, கார்த்திகை மாதம் அறுவடை செய்யலாம். ஆனால் தற்போது போதி மழை இல்லாததால் கடலை செடிகள் கருகி வருகின்றன என்றனர்.


Next Story