குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!


குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!
x

குரூப்-2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


Next Story