பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியை ராகுல்காந்தி நேரில் அறிவார்


பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியை ராகுல்காந்தி நேரில் அறிவார்
x

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியை பாதயாத்திரையின் மூலம் ராகுல்காந்தி நேரில் அறிவார் என காரைக்குடியில் அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியை பாதயாத்திரையின் மூலம் ராகுல்காந்தி நேரில் அறிவார் என காரைக்குடியில் அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறினார்.

பேட்டி

பா.ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமண விழா நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ராகுல்காந்தி பாதயாத்திரை செல்கிறார். அதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்காக என்று கூறுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியையும் பாதயாத்திரை செல்லும்போது ராகுல்காந்தி நேரில் அறிவார்.

பேச்சு வேறு, செயல் வேறு

காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்றனர். ஆனால் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? இதுதான் காங்கிரசின் நிலைமை. அவர்கள் பேச்சு வேறு, செயல் வேறு.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மிகப்பெரிய போட்டி போல் கபட நாடகம் நடத்தினாலும் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவர் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியில் தலைவரை தேர்வு செய்யும் வாக்காளர் பட்டியல் பற்றி யாருக்கும் தெரியாது.

மீண்டும் ஆட்சி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்கவே பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கலாம், அதே நேரத்தில் பா.ஜனதா கட்சிக்கு அதைவிட நல்லது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 450 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story