ஆம்புலன்சில் 'குவா குவா'


ஆம்புலன்சில் குவா குவா
x

கே.வி.குப்பம் அருகே ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகா கீழ்முட்டுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சில் சுமித்ராவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கீழ்முட்டுக்கூர் அருகே சென்றபோது சுமித்ராவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. அதைத்தொடர்ந்து ஆம்புலன்சை டிரைவர் ராஜேஷ் ஓரமாக நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சசிகுமார் பிரசவம் பார்த்தார்.

இதில் சுமித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story