காவலர் வீரவணக்கம்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை


காவலர் வீரவணக்கம்: நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை
x

கரூரில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நேற்று நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர்

வீரவணக்க நாள்

இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பணியின் போது உயிரிழந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை நினைவு கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.அந்த வகையில் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமை தாங்கி, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத்தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

மலர்தூவி மரியாதை

அப்போது இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 188. மடிந்த இவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்பின்னர் 60 குண்டுகள் முழங்க காவலர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நினைவு தூணில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story