கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி


கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 6 Sept 2023 1:15 AM IST (Updated: 6 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

நீலகிரி

கூடலூர்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே தேசிய அளவிலான கராத்தே போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சஞ்சய், முகம்மது ஹர்ஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் மற்றும் 3-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story