கூடலூர் அணி வெற்றி


கூடலூர் அணி வெற்றி
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கிரிக்கெட் போட்டியில் கூடலூர் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கூடலூர் அணியும், கூடலூர் ஆரஞ்ச் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் சனோஜ் 101 ரன்கள் எடுத்தார். பிரவீன் ஜி.சேகர் 56 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். கூடலூர் ஆரஞ்ச் அணி பந்து வீச்சாளர் கிளிப்டன் சான் மோசஸ் 5 விக்கெட்டுகள், சித்தராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய கூடலூர் ஆரஞ்ச் அணி 31.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் வினீத் 39 ரன்கள், அமிர்தராஜ் 38 ரன்கள் எடுத்தனர். கூடலூர் அணியின் பந்து வீச்சாளர்கள் சபீர் மற்றும் முரளி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் அணி வெற்றி பெற்றது.



Next Story