சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம்-கலெக்டர் அம்ரித் தகவல்


சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம்-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2023 2:00 AM IST (Updated: 7 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் இன்று நடத்தப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் இன்று நடத்தப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

சுயதொழில் கடன் திட்டம்

புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள், அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழிலகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாசனை திரவியங்கள் தயாரித்தல்

இந்த திட்டங்களின் கீழ் தேயிலை மற்றும் காப்பி தூள் தயாரித்தல், மசாலா பொருட்கள், வாசனை திரவியங்கள், சாக்லெட், வர்க்கி, சணல் பைகள், அறைக்கலன்கள் தயாரித்தல், காரட் கழுவும் எந்திரம், காங்கிரீட் கலவை இயந்திரம், உடற்பயிற்சி கூடம், பொறியியல் இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் பணிமணை, அழகு நிலையம், மொபைல் கேட்டரிங், டிப்பர் லாரி, மளிகை கடை, பெட்டி கடை, கால்நடை வளர்ப்பு, வாகன உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் இதர தொழில்கள் தொடங்கலாம். மேலும் விவரங்கள் பெற 0423-2443947, 89255 33996, 89255 33997, 63791 00870, 89255 33995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story