நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Sept 2022 11:07 AM IST (Updated: 30 Sept 2022 11:17 AM IST)
t-max-icont-min-icon

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்

அகமதாபாத் ,

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டின்போது, வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்

இதனை தொடர்ந்து, காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து மகிழ்ந்தார்

இந்த ரெயில்களின் கூடுதல் சிறப்பம்சம், இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்படும். இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றலை உபயோகப்படுத்தும். ரெயில் நாட்டின் 3-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். இதற்கு முன்பு, புதுடெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் ரெயில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மற்றொரு ரெயில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019-ம் ஆண்டு அக்டோபரிலும் தொடக்கி வைக்கப்பட்டது.

1 More update

Next Story