மனைவியை கொன்ற வழக்கில் கைதான பெயிண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மனைவியை கொன்ற வழக்கில் கைதான பெயிண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரே உள்ள பூந்தோட்டம் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). பெயிண்டர். இவருடைய 2-வது மனைவி லட்சுமி. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி சுந்தர், லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சுந்தர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி சுந்தரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார்.
Next Story