மொபைல் DP-யால் சிக்கிய கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்


மொபைல் DP-யால்  சிக்கிய கள்ளத்துப்பாக்கி விற்பனையாளர்
x

சென்னையில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் கொளத்தூர் மற்றும் காவாங்கரை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுவருவதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் கொளத்தூர் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஓட்டல் உரிமையாளர் யோகேஷ் என்பவர் மது விற்பதாக தெரியவந்தது.அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது அதில் அவர் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து டிபி ஆக வைத்திருந்தார்.இது குறித்து விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

இவ்விசாரணையில் யோகேஷ் அப்பகுதியில் தாதா எனும் பெயரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் சட்ட விரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்து அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார். இவரிடம் ரியல் எஸ்டேட் அதிபர் அபுதாகிர், நவாஸ்,அகமதுல்லா ஆகியோர் துப்பாக்கி வாங்கியது அம்பலமானது.அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.அபுதாகிரிடம் விசாரணை செய்ததில் ரியல் எஸ்டேடில் பிரச்சனை ஏற்படும்போது மிரட்டுவதற்காக வாங்கினேன் எனக் கூறினார்.நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் சங்கரும் இவரிடம் துப்பாக்கி வாங்கியது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக யோகேஷ் மற்றும் அவரிடம் துப்பாக்கி வாங்கிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story