என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் என்.சி.சி.மாணவர்களுக்கானவருடாந்திர ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் 8 நாட்கள் நடந்தது. இதில் 199 மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மாணவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு, வரைபடம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தீ விபத்துகளின் வகைகள், பாதுகாப்பு முறைகள், விழிப்புணர்வு ஆகியவை குறித்து உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் செயல்முறை பயிற்சியளித்தனர். பள்ளியின் டாக்டர் ஆஷா நிர்மல், உடல் நலம், முதலுதவி போன்றவை குறித்து காணொலி மூலம் விளக்கினார்.வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் பேசினார்.முகாமின் இறுதிநிகழ்ச்சியாக கேம்ப் பயர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சைனிக் பள்ளியின் முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு கலந்து கொண்டார்.8 நாட்கள் நடந்த முகாம், பள்ளியின் துணை முதல்வரும், பள்ளியின் தேசிய மாணவர் படையின் கமாண்டிங் ஆபிசருமான விங் கமாண்டர் தீப்தி உபாத்யாயா தலைமையில் நடந்தது.
---
3 காலம்