செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி


செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
x

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை துவங்கி மழை பெய்து வருகிறது. இதனால் மலையையொட்டி உள்ள இடங்களில் கன மழைபெய்து வந்தது.

இந்நிலையில் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புள்ளி மெட்டு என்ற இடத்தில்அமைந்துள்ள குண்டாறு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குண்டாறு அணை நிரம்பியது. அணையின்கொள்ளளவு 36.10 அடி உயரமாகும். குண்டாறு அணை மூலம் ஆயிரத்து 123 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

நேரடியாக 731 ஏக்கரும் மறைமுகமாக 392 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பியதால் விவசாயம் மற்றும் குடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாயப் பணிகளை ஆரம்பித்து உள்ளனர்.


Next Story