2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

போக்சோ வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

போக்சோ வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

போக்சோ வழக்கில் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்காவேரி பெருமாண்டி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் முருகன் (வயது55). இவர் மீதும், மேலக்காவேரி செக்கடித்தெருவை சேர்ந்த கணேசன் மகன் செல்வம் (65) என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் முருகன், செல்வம் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த வழக்கு ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து முருகன், செல்வம் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 2 பேரும் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.


Next Story