குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்


குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
x

தொடர் விடுமுறை என்பதால் குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கோட்டும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.

இந்த நிலையில் இன்று குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனிடையே தற்போது தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அருவிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் சீர்ப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story