கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேர் கைது


கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் குட்கா பதுக்கி விற்ற 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் குட்கா, பான்பராக், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் கடைகளில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது குட்கா, பான்பராக், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த உசேன் (வயது 31), நேதாஜி சாலை சவுகதுல்லா (48), பனகல் தெரு கனகராஜ் (42), குண்டியால்நத்தம் சீனிவாசகவுடா (70) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். குரியனப்பள்ளி ராமச்சந்திரன் (45), ஜூஜூவாடி சிவம்மா (42), காமன்தொட்டி மணிகண்டன் (32), தேன்கனிக்கேர்டை அய்யம்பாண்டி (57), ராஜம்மா (62), பழையூர் கோவிந்தசாமி (56) ஆகிய 6 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல்

இதேபோல் வெங்கட்டதம்பட்டி ரவி (46), சிவம்பட்டி சங்கர் (55), சாமல்பட்டி மகபூப் ஜான் (72), கல்லாவி சந்திரா (50), ரெட்டி வலசை காதர் உசேன் (63) ஓசூர் ரவி (55), பேரிகை மணி (51), கீழ்பேட்டை ராஜேஷ் (26), ஓசூர் சின்ன எலசகிரி நசிமுதின் ஷேக் (32) ஆகிய 9 பேரும் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஓசூர் ஜலகண்டேஸ்வர் நகர் ராஜசேகர் (55), நாகொண்டப்பள்ளி சூடப்பா (38), அனுமன்தீர்த்தம் மாரியப்பன் (40), கல்லவி நாராயணன் (55), சாமல்பட்டி சையத்ஷாலர் (36), பாகிமானூர் திலகவதி (30), சிங்காரப்பேட்டை சந்தோஷ் (32), தேன்கனிக்கோட்டை மஜித் தெரு முகமது ஜாபர் (41), உப்பாரப்பள்ளி விஜயம்மா (50) ஆகிய 9 பேரும் கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story