குட்கா விற்றதாக 26 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் குட்கா விற்றதாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய சோதனையில் கடைகளில் குட்கா விற்றதாக அனுமன்தீர்த்தம் பத்மினி (வயது 60), தர்மன்தோப்பு இளவரசன் (25), போச்சம்பள்ளி அகரம் அண்ணாமலை கொட்டாய் பூபாலன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ஆவத்தவாடி சதீஷ் (29), அச்சமங்கலம் தேவபிரசாதேவ் (49), போச்சம்பள்ளி பன்னீர் (65), வாடமங்கலம் ராஜா (60), கீழ்முக்குருத்தி கோவிந்தன் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் ஜெய்சங்கர் காலனி மாரியப்பன் (42), கிருஷ்ணகிரி ராசுவீதி குமார் (48), கிருஷ்ணகிரி அப்துல் காதர் (50), மேல்சோமார்பேட்டை சேகர் (62), ராமசாமி(52), மிட்டஅள்ளி கோவிந்தன் (58) ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
நெக்குந்தி பட்டம்மாள் (55), கொட்டாவூர் சுரேஷ் (44), பாரதியார் நகர் சபீர் (35), பெத்தனப்பள்ளி அருள்ராஜ் (29), வேப்பனப்பள்ளி சுசீலா (45), தேவன்தொட்டி வீரப்பன் (55), போடம்பட்டி முருகன் (45), பூவரசம்பட்டி செல்வம் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பாகலூர் முனிகிருஷ்ணா (38), ஏ.செட்டிப்பள்ளி சீனிவாஸ் (50), வெங்கடேச நகர் குமரவேல் (67), கக்கதாசம் தனலட்சுமி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் குட்கா பதுக்கி விற்றதாக ஒரேநாளில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.