குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக குட்கா கடத்திய கார் விபத்தில் சிக்கியது.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் அட்கோ போலீசார் பேரண்டப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு கார் விபத்துக்குள்ளாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அருகில் சென்று பார்த்தபோது காரில் யாரும் இல்லை. மேலும் காரில் சோதனை செய்தபோது பெட்டிகளில் குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தபோது விபத்தில் சிக்கியதால் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கார் மற்றும் அதில் இருந்த 228 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்திய டிரைவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






