பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்காவை போலீசார் ஓசூரில் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் கடத்த முயன்ற 2 கிலோ குட்காவை போலீசார் ஓசூரில் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
ஓசூர் சிப்காட் போலீசார் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர், போலீசாரை கண்டதும் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா, குட்கா ஆகியவை கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
குட்கா பறிமுதல்
அப்போது தப்பி ஓடிய நபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த அசாரூதின் (வயது 32) என்பதும், பெங்களூருவில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு குட்கா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.