குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது


குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
x

போலீசார் மீது கொலை முயற்சியில் ஈடுபட்ட குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

விழுப்புரம்

விழுப்புரம்

தொடர் குற்றங்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வெள்ளம்புத்தூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சேட்டு மகன் மூர்த்தி (வயது 42). இவர் மீது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 7.7.2022 அன்று கண்டாச்சிபுரத்தை அடுத்த திருமலை ராயபுரம் அருகே மூர்த்தி, குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது அவர், போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயற்சித்ததோடு இரும்புக்கம்பியால் தாக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட போலீசார், மூர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story