குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது


குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 July 2023 3:00 AM IST (Updated: 19 July 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு பஸ்சில் கூடலூருக்கு குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதன் உள்ளே தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1,575 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வடக்கன்பரம்பில் சுள்ளியோடு பகுதியை சேர்ந்த லியோ ஜாய் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story