பா.ஜ.க. கூட்டணி குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும்-எச்.ராஜா பேட்டி

பா.ஜ.க. கூட்டணி குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும்-எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

சிவகங்கை

பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

விருது வழங்கும் விழா

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கும் விழா மாவட்ட தலைவர் கோமதி நாச்சியார் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பஞ்சவர்ணம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 70 பேருக்கு முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் விருதுகளை பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மேப்பல் சக்தி, துணை தலைவர் சுகவனேஸ்வரி, வக்கீல் சொக்கலிங்கம், மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் மீனாம்பிகா, மாவட்ட துணை தலைவர் தையல்நாயகி, பொருளாளர் விடுதலை மலர், நகர தலைவர் மாலா, நகர் பொது செயலாளர்கள் பாலா, சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உடைந்த மண்சட்டி

இதை தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தி.மு.க. தற்போது உடைந்த மண்சட்டியாக உள்ளது. அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்திற்கு தொண்டர்களையும், பொதுமக்களையும் அடிக்கிறார்கள். இதில் உச்சகட்டமாக அவர்களது எம்.பி. வீட்டில் அந்த கட்சி அமைச்சரின் ஆதரவாளர்களே சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். தி.மு.க. முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அண்ணாமலைக்கு பணிவும், துணிவும் வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். முதலில் அவருக்கு அது இருக்க வேண்டும். பிரதமர் மோடி இன்று உலக நாடுகள் போற்றும் அரசியல் தலைவராகவும், உலக நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறார்.

பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து மத்திய கமிட்டிதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

தேர்தல் வரும்போது கூட்டணி பற்றியும், வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் மத்திய கமிட்டி போர்டு தான் முடிவு செய்யும். அது பற்றி நாம் எதுவும் முடிவு செய்ய முடியாது. நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் எதையும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால்தான் ஏமாந்து போவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story