பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது


பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று அரையாண்டு தேர்வு தொடங்கியது. இதில் 10-ம் வகுப்பு பயிலும் 7 ஆயிரத்து 937 மாணவ-மாணவிகள், பிளஸ்-2 பயிலும் 7 ஆயிரத்து 661 மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 52 ஆயிரத்து 278 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் தலைமையில் 14 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story