மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம்:-
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.240.39 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக நிதியை குறைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.300 மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் பகுதி செயலாளர் சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கரூரன், மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன், பென்னாகரம் பகுதி தலைவர் சக்திவேல், சின்னப்பள்ளி பகுதி செயலாளர் சின்னமாது, தர்மபுரி பகுதி குழு செயலாளர் சுசீலா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.