அன்னவாசலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
அன்னவாசலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2023-24-ம் நிதி ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏ.எஸ்.ஐ. உருவாக்கி தொடர்ச்சியாக 4 மணி நேர வேலையை உறுதிபடுத்திட வேண்டும். அரசின் முழு கூலியை உறுதிப்படுத்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத் திறனாளிகளை 100 நாள் வேலை திட்ட இணையதளத்தில் உடனடியாக இணைக்க வேண்டும். அனைவருக்கும் நீல வண்ண சிறப்பு அட்டையை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் அதிகமானவர்கள் வேலை செய்யும் இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளியை பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்து செயலியை அளித்து வேலை வழங்கிடு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.