பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு


பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-14T00:17:02+05:30)

நாகர்கோவில் சாலையில் தவற விட்ட ரூ.5,400 இருந்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒரு பர்ஸ் அனாதையாக கிடந்தது. அதை அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற கோட்டாரை சேர்ந்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் கென்னடி ரோட்ரிகோ என்பவர் எடுத்து திறந்து பார்த்தார். அப்போது அந்த பர்சில் ரூ.5,400 பணம், ஆதார் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பர்சை கென்னடி ரோட்ரிகோ கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பணத்துடன் கிடந்த பர்சை மீட்டு நேர்மையாக ஒப்படைத்த கென்னடி ரோட்ரிகோவை போலீசார் பாராட்டினர். மேலும் பர்சை தவறவிட்ட நபர் கோட்டார் போலீஸ் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பர்சை தவறவிட்டது திருப்பதிசாரத்தை சேர்ந்த மனோஜ் ரெத்தினம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோஜ் ரெத்தினம் தனது பர்சை பெற்றுக் கொள்வதற்காக நேற்று கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பர்சை மீட்டு கொடுத்த கென்னடி ரோட்ரிகோவையும் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் வரவழைத்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் மனோஜ் ரெத்தினத்திடம் பர்சை கென்னடி ரோட்ரிகோ ஒப்படைத்தார்.


Next Story