கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 11:38 AM GMT)

சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் 10 சதவீத கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவில் பாடாப்பிள்ளையார் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விசைத்தறி சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜ், சி.ஐ.டி.யு. தென்காசி மாவட்ட தலைவர் அயூப் கான், விசைத்தறி சங்கத் தலைவர் ரத்தினவேல், செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த தவறினால் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சக்திவேல், சுப்பிரமணியன், பிலிப், முருகன் உள்ளிட்ட ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். முடிவில் விசைத்தறி சம்மேளன துணைத் தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story