தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x

காதலித்த பெண்ணை பிரித்ததால் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சுரேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் சுரேஷ்குமார் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் செங்களாக்குடிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு அறிவுரை கூறி இருவரையும் பிரித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காதலியை பிரிந்த மன விரக்தியில் இருந்த சுரேஷ்குமார் நேற்று அதிகாலை தனது வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story