"தூக்கு...தூக்கு விழாலாம் முடிஞ்சு போச்சு" முதல்-அமைச்சர் விழாவில் நடந்த கூத்து...!


தூக்கு...தூக்கு விழாலாம் முடிஞ்சு போச்சு முதல்-அமைச்சர் விழாவில் நடந்த கூத்து...!
x

கரூரில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் உள்ள மைதானத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா என்பதால் ஏற்பாடுகள் பிரம்மாண்ட செய்யப்பட்டு இருந்தது.

பின்னர், காலை 10 மணிக்கு இந்த விழா தொடங்கியது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அமைச்சர்கள், மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த விழா நிறைவடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலந்து செல்ல தொடங்கினர். அப்போது, விழா நடைபெறும் அரங்கின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை தார்களை போட்டிப்போட்டுக் கொண்டு எடுத்து சென்றனர்.



Next Story