தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2023 1:15 AM IST (Updated: 23 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட்டை சேர்ந்தவர் பிஜூ(வயது 35). அங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி விஜி. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பிஜூ மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது குடிப்பதால் அவரை விஜி கண்டித்து வந்தார். ஆனாலும் அவர் மது குடிப்பதை கைவிடவில்லை. மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

தூக்கில் தொங்கினார்

இந்த நிலையில் நேற்று காலையிலும் பிஜூ மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்தார். இதனால் விஜி கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, பிஜூ தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜூ அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து பிஜூவை மீட்டு அருகில் உள்ள எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிஜூ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story