ஹான்ஸ், பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது


ஹான்ஸ், பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது
x

பொறையாறு அருகே ஹான்ஸ், பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே ஹான்ஸ், பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

பொறையாறு அருகே ஆயப்பாடி காழியப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் ஆயப்பாடி அருகே நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக பஸ் நிறுத்தம் அருகே நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 10 ஹான்ஸ் பாக்கெட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

தொழிலாளி கைது

விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சேங்கல் வடக்கு தெருவை சேர்ந்த கமலதாசன்(வயது44) என்பதும், இவர் பொறையாறு அருகே திருக்களாச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரனிடம் ஆயப்பாடி பெரிய மதகு அருகே உள்ள சிப்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கமலதாசன் கொடுத்த தகவலின் பேரில் பொறையாறு அருகே காழிப்பநல்லூர் ஊராட்சி கண்ணப்பன் மூலை கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story