கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா


கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
x

நெல்லையில் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.

திருநெல்வேலி

அருகன்குளம் :

நெல்லையில் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது.

அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஜெய் மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9.30 மணிக்கு 108 தேங்காய் கொண்டு ஆஞ்சநேயர் ஹோமம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 6 மணிக்கு ராமர்-சீதா திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

காட்டுராமர் கோவில்

நெல்லை அருகன்குளம் காட்டுராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி காலை 8.30 மணிக்கு சிறப்பு ஹோமம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12.30 மணிக்கு மகாதீபாராதனை, பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள ராமதூதபக்த ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், பழ அலங்காரமும், புஷ்பாஞ்சலியும் நடக்கிறது.

கெட்வெல் ஆஞ்சநேயர்

இதேபோல் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில், நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடக்கின்றது.


Next Story