ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
x

ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே அச்சமங்கலம் மாக்கனூர் கூட்ரோட்டில் அமைந்துள்ள ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில் 8-ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

இதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 108 பால்குட அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஊஞ்சல் உற்சவ சேவையும், மேல் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பலர் நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் கட்டி ஆஞ்சநேயரை வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதனையொட்டி பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் தர்மகர்த்தா சம்பத், திருப்பணிக்குழு தலைவர் சித்தேரி சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், ஏ.வி.பெருமாள், பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆஞ்சி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story