காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) 52வது பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "என் அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும்! இந்தச் சோதனையான காலத்தில் உங்களின் பற்றுறுதியையும் விடாப்பிடியான துணிவையும் நாடு கண்டுகொண்டிருக்கிறது. பெருமைமிகு நமது குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற எனது வாழ்த்துகள்!" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தி, தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த்திருந்தார்.






Next Story