இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனைகள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story