ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை


ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை

கோயம்புத்தூர்

போத்தனூர்

தனியார் சேவை மைய இலவச எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் சேவை மையம்

கோவை போத்தனூர் உமர் நகரில் வாடகை ஆட்டோ தொடர்பாக தனியார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம்பெண்களும் வேலை செய்து வருகிறார்கள். இந்த மையத்துக்கு டோல் பிரீ எண்ணும் (இலவச எண்) உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 எண்களில் இருந்து இந்த மைய இலவச எண் கொண்ட செல்போனுக்கு அடிக்கடி போன் வந்து உள்ளது. அதை எடுத்து பெண்கள் பேசும்போது, எதிர்முனையில் பேசுபவர்கள் சரியாக பேசுவது இல்லை.

ஆபாச குறுஞ்செய்தி

இந்தநிலையில் கடந்த 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை ஆபாச குறுஞ்செய்தி, புகைப்படங்கள் வந்து உள்ளன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மையத்தில் வேலை செய்து வரும் இளம்பெண்கள் சக ஊழியர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறுத்த போலீசார் கூறும்போது, இந்த தனியார் சேவை மையத்துக்கு 2 செல்போன்களில் இருந்து ஆபாச மெசேஜ் வந்து உள்ளது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த செல்போன் எண் யாருடையது, எதற்காக அவர்கள் ஆபாச மெசேஜ் அனுப்பினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story