மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?


மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசி டிக்கெட் வேண்டாம் என்று அரசு டவுன் பஸ்சில் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பதில் அளித்தார்.

கோயம்புத்தூர்

ஓசி டிக்கெட் வேண்டாம் என்று அரசு டவுன் பஸ்சில் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பதில் அளித்தார்.

கண்டக்டரிடம் தகராறு

கோவை மதுக்கரையில் அரசு டவுன் பஸ்சில் இலவச பயணம் வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு மூதாட்டி துளசியம்மாள் என்பவர் கண்டக்டரிடம் தகராறு செய் தார். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

இதையடுத்து அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு மூதாட்டியை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக மதுக்கரை நகர தி.மு.க. செயலாளர் ராமு என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தவறான தகவல்

இது தொடர்பாக மூதாட்டி துளசியம்மாள் உள்பட 4 பேர் மீது மதுக்கரை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததாக காவல்துறையின் பதிவு குறிப்புடன் தகவல் வெளியானது.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மூதாட்டி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட வில்லை. வழக்கு பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது. காவல்துறையின் பதிவு குறிப்பு என்று பரவியது போலியானது.

அதை சமூகவலைத் தளங்களில் பரப்பியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிக ளில் பெட்ரோல் குண்டுகள் வீசியதாக 9 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story