ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதா ? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆன்லைன் சூதாட்டம் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறது. இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை நன்கு உணர்ந்ததால் தான் அதை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதா?, அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதா?.

ஒருவேளை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?, வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும்.

அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story