ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்


ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2023 4:15 AM IST (Updated: 7 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ஆபத்தான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா கடத்தலை தடுக்கவும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். சோதனைச்சாவடி கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதற்கிடையே சோதனைச்சாவடியையொட்டி ஆபத்தான மரம் இருந்தது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலை காணப்பட்டது. எனவே, ஆபத்தான மரத்தை அகற்றி பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாளூர் சோதனைச்சாவடி அருகே இருந்த ஆபத்தான மரத்தை வெட்டி அகற்றி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

1 More update

Next Story