ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை நோக்கி வந்த அரிசி கொம்பன் யானையின் கதி என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை நோக்கி வந்த அரிசி கொம்பன் யானையின் கதி என்ன? என்று தெரியவில்லை. அந்த யானையின் உடலில் பொருத்திய ‘சிப்’ கருவி சிக்னல் தரவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை நோக்கி வந்த அரிசி கொம்பன் யானையின் கதி என்ன? என்று தெரியவில்லை. அந்த யானையின் உடலில் பொருத்திய 'சிப்' கருவி சிக்னல் தரவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
யானை கண்காணிப்பு
கேரளாவிலும், தேனி மாவட்ட வனப்பகுதியிலும் அரிசி கொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானையின் அட்டகாசம் நீடித்து வந்தது. வீடுகள், ரேஷன் கடைகளை பதம் பார்த்து அரிசியை ருசித்ததால் இந்த யானையை அவ்வாறு அழைத்தார்கள்.
இந்த யானையின் உடலில் சிப் பொருத்தப்பட்டு, அதன் மூலம் கிடைத்த தகவலை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த யானையானது, பெரியார் வனப்பகுதியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் நுழைந்து சுற்றி வந்ததாக தகவல் பரவியது.
தேடும் பணி
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட வனப்பகுதியில் ரேஷன் கடைகள் மற்றும் கடைகள் யானையால் சேதபடுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக பகுதியானது அடர்ந்த பள்ளத்தாக்குகளையும் வனப்பகுதியையும் கொண்டதாகும். அரிசி கொம்பன் யானை இப்பகுதியில் நுழைந்து உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மாயம்
இந்தநிலையில் தற்போது யானை எந்த பகுதியில் மாயமானது என தெரியவில்லை. மேலும் அதன் உடலில் பொருத்திய சிப் கருவிக்கு சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வனத்துறையினர், வன ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏதேனும் கும்பலால் அரிசி கொம்பன் யானை, சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம்? என வனத்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்..
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்குள் அரிசி கொம்பன் யானை வரவில்லை என்பது மட்டும் தெரியும் என்றனர்.