லிப்ட் கொடுத்தவரின் மதுவை குடித்த வாலிபர்; தட்டி கேட்டவரின் மண்டையை உடைத்த கொடூரம்..!


லிப்ட் கொடுத்தவரின் மதுவை குடித்த வாலிபர்; தட்டி கேட்டவரின் மண்டையை உடைத்த கொடூரம்..!
x

அரியலூர் அருகே லிப்ட் கொடுத்தவரின் தலையில் இரும்பு ராடால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 55), விவசாயி. இவர் வல்லத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த பைக்கில் சென்றுள்ளார். அப்போது குவாகம் கிராமத்தின் காலணி தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளார். இருவரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

பைக் ஓட்ட வேண்டும் என்பதால் சின்னதுரை குறைவாக குடித்து விட்டு மீதம் இருந்த மதுபானத்தை அந்த வாலிபர் இடம் கொடுத்து, மீதம் உள்ளதை வீட்டிற்கு சென்று குடித்து கொள்கிறேன், ஆகையால் அதனைப் பத்திரமாக வைத்திருக்க சொல்லியுள்ளார்.

பின்னர் இருவரும் பைக்கில் குவாகம் நோக்கி வந்துள்ளனர். குவாகம் கடைவீதியில் வந்த உடன் சின்னதுரை மதுபானத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் அதனை நான் பைக்கில் வரும் வழியிலேயே ராவாக குடித்து விட்டதாகவும் வீட்டில் உள்ளது அதனை எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சின்னதுரை அவர் வீட்டு அருகே சென்று மதுபானம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இரும்பு குழாயை எடுத்து சின்னதுரை தலை மற்றும் காலில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் சின்னதுரைக்கு மண்டை உடைந்ததோடு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு 30 தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் லிப்ட் கொடுத்த விவசாயியை கொடூரமாக தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். லிப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story