தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது


தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
x

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

திருச்சி

தலைமை ஆசிரியர் பணியிடம்

தமிழகம் முழுவதும் 1,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில், தலைமை ஆசிரியர் இல்லாததால் அரசு பள்ளிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை நிவர்த்திசெய்யும் வகையில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள முதுகலை பாட ஆசிரியர்கள், முதுகலை மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது.

இன்று கலந்தாய்வு

இந்தநிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று எமீஸ் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் இன்று முதல் 300 பேருக்கும், நாளை (சனிக்கிழமை) 301 முதல் 600 வரை உள்ளவர்களுக்கும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீதம் உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story