தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் ஜெகன்நாதன், மகளிர் அணி செயலாளர் காஞ்சனமாலா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story