குடும்ப தலைவிகள் அஞ்சலகங்களில்வங்கி கணக்கு தொடங்கலாம்


குடும்ப தலைவிகள் அஞ்சலகங்களில்வங்கி கணக்கு தொடங்கலாம்
x

குடும்ப தலைவிகள் அஞ்சலகங்களில்வங்கி கணக்கு தொடங்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை பெற தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியம் என்பதால், இந்த திட்டத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தகுதியானவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை அணுகி இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியில் இ-கே.ஒய்.சி. என்ற முறையில் கணக்கு தொடங்கி உரிமை தொகையை பெற்று கொள்ளலாம். மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் பிரதம மந்திரி விவசாயி நிதி உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இது போன்ற கணக்கு தொடங்கி பயன் பெறலாம். பொதுமக்கள் இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியின் மூலம் மட்டுமே வழங்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.396, ரூ.399 செலுத்தி இணையலாம். இந்த காப்பீடு திட்டத்தில் இணைய இந்திய அஞ்சல் துறை பட்டுவாடா வங்கியின் சேமிப்பு கணக்கு அவசியம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story