சுகாதார விழிப்புணர்வு கூட்டம்


சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
x

தக்கோலம் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் யுவஸ்ரீ, பேரூராட்சி துணைத் தலைவர் கோமளா ஜெயகாந்தன், செயல் அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் சொக்கலிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் பொது மக்களை சென்றடைவதற்கான பணிகள், பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நாய் கடியை கட்டுப்படுத்தவும், வாடகை இடத்தில் இருக்கும் இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்துவது, எடை குறைவாக குழந்தைகள் பிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு, கவுன்சிலிங் அளிப்பது உள்ளிட்டவைகளை செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானித்தனர்.

இதில் துணை சுகாதார நிலைய செவிலியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story