சுகாதார ஆய்வாளர் பாடப்பிரிவு முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

சுகாதார ஆய்வாளர் பாடப்பிரிவு முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா
x

சுகாதார ஆய்வாளர் பாடப்பிரிவு முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

நாகப்பட்டினம்

நாகை அடுத்த பாப்பாகோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் பாடப்பிரிவு முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன், கல்லூரி இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாரா மெடிக்கல் கல்லூரி உதவி பேராசிரியர் ரம்ஜான்கனி நன்றி கூறினார்.

Next Story