ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி


ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
x

மேலக்குடிகாடு கிராமத்தில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலக்குடிகாடு கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவு தேர் பவனி நடைபெற்றது. பங்குத்தந்தை சூசை மாணிக்கம் ஆடம்பர தேர் பவனியை தொடங்கி வைத்தார். வாண வேடிக்கைகளுடன் தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அதன்பின்னர் திருப்பலி நடைபெற்றது. தேர்பவனியையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story