தாய்மார்கள் பாலூட்டும் அறையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தாய்மார்கள் பாலூட்டும் அறையில் சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்களில் தாய்மார்கள், பாலூட் டும் அறைகள் கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது, கோவை மாவட்டத்திலும் அனைத்து பஸ் நிலையங்களில் தாய் மார்கள் பால் ஊட்டும் அறைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலை யில் கோவை சோமனூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடந்தது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் அவதிப்ப டும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அருணா சோமனூர் பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று தாய்மார்கள் பாலூட்டும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர், தாய்மார்கள் பாலூட்டும் அறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த அறையை திறந்து வைத்து தாய்மார்களுக்கு தெரியும் வகையில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.